_அப்ப பரகத் என்றால் என்ன?
🌴 `பரகத்`🌴
*_பரகத் என்பது அதிக பணம் இருப்பது மட்டும் இல்லை..!_* என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.
*_அப்ப பரகத் என்றால் என்ன?_*
➡️ _ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் கடந்து விட்டது; நீங்கள் டாக்டரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்றால், அது தான் பரகத். ஏனெனில், அல்லாஹ் உங்களுக்குப் பணத்தில் அல்ல, உங்கள் ஆரோக்கியத்தில் பரகத் செய்துள்ளான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்._
➡️ _காலங்கள் மாறினாலும், வருடங்கள் கடந்தாலும் முன்பு வாங்கிய ஆடையே உங்களுக்கு பொருத்தமாக இருந்து; புதிய ஆடை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றால், அதுதான் பரகத்._
➡️ _நீங்கள் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடுகிறது, அல்லது நீங்கள் சமைத்த உணவில் கூடுதலாக ஒரு தட்டும் மீதம் இருக்க, அதை தேவையுள்ள ஒருவருக்கு நீங்கள் கொடுத்து உதவினால், அதுதான் பரகத்._
➡️ _நீங்கள் குறைவாக தூங்கினாலும், மன நிம்மதியுடன் உடல் வலி இல்லாமல் புத்துணர்ச்சியாக தூக்கத்திலிருந்து எழுந்தால், அதுதான் பரகத்._
➡️ _நீங்கள் நெரிசல் மிகுந்த இடத்திற்குச் சென்று, தாமதம் ஆகும் என்ற பயம் இருக்கும் நிலையில், அல்லாஹ் உங்கள் காரியங்களை எளிதாக்கி, குறித்த நேரத்தில் வேலை முடிந்துவிட்டால், அதுதான் பரகத்._
➡️ _நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது நற்பண்புகள் மற்றும் தனித்துவமான குணாதிசயங்களால் மக்கள் உங்களை நேசித்தால், உங்களுக்கு மதிப்பளித்தால், அதுதான் பரகத்._
➡️ _குறித்த நேரத்தில் வேலை முடிய வேண்டும் என்று நீங்கள் நினைத்திருக்க, அதைவிட குறுகிய காலத்தில் வேலை முடிந்து விட்டால், அதுதான் பரகத்._
இப்படியாக உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளில் *_பரகத்தை கண்டு இருப்பீர்கள், உணர்ந்திருப்பீர்கள்_* அதற்காக அல்லாஹ்விற்கு நன்றி சொல்லுங்கள், இன்னும் *_அதிகம் உங்களுக்கு பரகத்தை_* ஏற்படுத்துவான்.
*لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ*
_நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு அதிகப்படுத்துவேன் (அல்குர்ஆன் : ௧௪:௭)_
இது உண்மையில் பரகத்தின் உண்மையான அர்த்தத்தை மிகவும் அழகாக விளக்குகிறது.
நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு மகிழ்ச்சிகளும், ஆரோக்கியமும், மன அமைதியுமே உண்மையான செல்வம் என்பதை இந்த வார்த்தைகள் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.
அல்லாஹ்வின் இந்த அளப்பரிய அருட்கொடைகள் நன்றி செலுத்துவதே, அதிக பரகத்திற்கான வழி என்பதை குர்ஆனிய வசனத்துடன் முழுமையாக்கியிருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.
நம்மில் பலர் இந்த 'பரகத்'ை அனுபவித்துக்கொண்டே அதை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். இந்த செய்தி அதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
மீண்டும், இந்த அற்புதமான ஞானத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

Comments
Post a Comment