கடன் விஷயத்தில் கவனமாக இருங்கள்!
கடன் வாங்கியிருந்தால் உடனே அதை திருப்பி கொடுங்கள்!
கடன் கொடுத்தவர் கேட்பதற்கு முன்பு நீங்களாக தேடிச்சென்று கடனை திருப்பிக் கொடுங்கள்!
தவணைக்கு முன்பே கடனை திருப்பிக் கொடுக்க முயற்சியுங்கள்!
கடன் வாங்கிய உடனே அதை திருப்பிக் கொடுக்க முயற்சிகளை ஆரம்பித்துவிடுங்கள்.
தவணை வந்தவுடன் கடன்கொடுத்தவர் உங்களிடம் கேட்குமளவிற்கோ உங்களை தேடிவருமளவிற்கோ வைத்துக்கொள்ளாதீர்கள்.
கடன் கொடுத்தவர் உங்களை தேடும்போது ஓடி ஒளியாதீர்கள்! அவரின் அழைப்பை தட்டாதீர்கள்! அவரை அலைக்கழிக்காதீர்கள்! அவர் கடனை கேட்டு கடினமாக பேசினாலும் நீங்கள் அவரிடம் கனிவாக பேசுங்கள்!
அடமானம் கொடுக்காமல், அல்லது சாட்சி வைத்து எழுதிக்கொடுக்காமல் யாரிடம் கடன் வாங்காதீர்கள்!
கடனுடன் இறந்தவர் ஷஹீதாக இருந்தாலும் அவருக்கு மன்னிப்பு இல்லை என்பதை நினைவில் வையுங்கள்!
வட்டிக்கு கடன் வாங்கவே வாங்காதீர்கள்!
அனாவசியத் தேவைகளுக்கும் ஆடம்பர தேவைகளுக்கும் கடன் வாங்காதீர்கள்!
கடன் விஷயத்தில் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்!
அல்லாஹ்வே கடன்களை அடைக்க முடியாமல் போவதிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்!
Comments
Post a Comment